பஞ்சாப்:

புலம்பெயர்ந்தவர்கள் விவகாரத்தை பாஜக அரசிலாக்குகிறது என்று கேப்டன் அமரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி தினம் தினம் வெளியாகும் செய்திகள் நம்மை கலங்கடித்து வருகின்றன. பல நூறு கிலோ மீட்டர் குடும்பத்தோடு நடந்தே வீடு திரும்பும் அவர்களின் சோகம் சொல்லில் அடங்காதது. டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு கால்நடையாகப் புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை காங்கிரசின் பிரதான தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி சந்தித்தார். உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி அவர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கும் அனுப்பி வைத்தார்.

சாலையோர பிளாட்பாரத்தில் அமர்ந்து ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ராகுல் காந்தியை புகழ்ந்து ஹாஷ்டேக்குகள் டிரெண்டானது மட்டுமின்றி அவர் தான் அடுத்த பிரதமர் என்றளவுக்கு நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இந்நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு உதவுவது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். மேலும், வசதிகளுடன் புலம்பெயர்ந்தோருக்கு அதிக ரயில்களை ஏற்பாடு செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் தனது கட்சி ஆளும் மாநிலங்களைக் கேட்பது நல்லது என்று கூறினார். துன்பத்தில் இருக்கும் தொழிலாளர்களின் நேரத்தை வீணடிப்பதைத் தவிர, அவர்களின் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவுவதற்காக அல்ல என அவர் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவிக்கையில், கஷ்டத்தில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு உதவுவது மனிதாபிமான முயற்சிகள்” என்று என்று தெரிவித்தார். மேலும், மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசுகள், நெருக்கடியை மோசமாக்கி, ஒரு கடுமையான பிரச்சினையை அரசியலாக்கி வருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

புலம்பெயர்ந்தோரை சென்றடைவதற்காக ராகுல் காந்தியை கேலி செய்வதற்கு பதிலாக, மத்திய அமைச்சர் உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி தலைமையிலான பாஜக அரசாங்கத்துடன் பேசியிருக்க வேண்டும் என்றும், புலம்பெயர்ந்தோரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகளை உத்தர பிரதேசத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.