Random image

நடிக்க கிளம்பிய கேப்டன்: விஜயகாந்த் பேஸ்புக் பக்கத்தில் நெட்டிசன்கள் கருத்து..

ட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து நேற்றுதான் முடிவு அறிவிக்கப்பட்டது. முதல்வேட்பாளர்களில் ஒருவராக வலம் வந்த  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் மூன்றாம் இடத்தைப்பிடித்து டெபாசிட் தொகையையும் இழந்தார். அவரது கட்சியின் வாக்கு சதவிகிதமும்  இந்தத் தேர்தலில் படுபாதாளத்துக்குப் போய்விட்டது. கட்சி அங்கீகாரமும் ரத்து செய்யப்பட இருக்கிறது.

இத்தனை  சோகத்தையும், “பணநாயகம் வென்றுவிட்டது..  சத்தியம் எப்போதும் ஜெயிக்கும்” என்று அறிக்கைவிட்ட கையோடு, “தமிழன் என்று சொல்” படத்தில் நடிக்க இன்று கிளம்பிவிட்டார் விஜயகாந்த்.

படப்பிடிப்பின் காட்சிகளையும் தனது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதற்கு ஏராளமான நெட்டிசன்கள் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். அதில் சுவாரஸ்யமான சில பின்னூட்டங்கள் இங்கே…

1

 

RK Harikrishnan தலைவா! நான் ரிஷிவந்தியம் தொகுதி நபர்.  எனக்கு தெரியும் நீங்கள் எங்கள் தொகுதி நலனுக்காக எவ்வளவு போராடினீர்கள் என்று

Ahamed Basiniya நீங்கள் வழக்கம்போல் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடியுங்கள் கேப்டன்!   அதான் சரிபட்டுவரும் உங்களுக்கு..!!

 

Palani Vel அன்பு கேப்டன்…  நீங்கள் மீண்டும் பழைய பன்னீர் செல்வம் ஆக வர வேண்டும்!  நல்ல பேச்சாளர் மாறணும்..   இந்த மக்கள் உங்கள் பத்தி பேசானும்!

 

Reban Surya P எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு!   ரமணா போல் அல்லது ரமணா பார்ட் 2  என சில படங்கள் கொடுங்கள். சங்கர் அல்லது முருகதாஸ் இவர்களை வைத்து நல்ல அரசியல் படம் கொடுங்கள். ஐந்து வருடத்தில் ஐந்து படம் கொடுங்கள். இதுதான்  எம்.ஜி.ஆர் அவர்கள் கையாண்ட யுக்தி. தங்களின் படம் மூலமாக நிச்சயமாக ஒரு மாற்றம் தேடி வரும்.

 

Prince Raja நேர் காணலில் போது 100 க்கு 90 சதவீதம் பேர் தி. மு.க. உடன் கூட்டனி வேண்டும் என்று விருப்ப பட்டார்கள்.   ஆனால் என்ன நடந்து என்று தெரியவில்லை.

Pandian Inbasagaran Rajadhas யாருயா அந்த வைகோ தனி ஆளா இருந்து
கூட இருந்த அஞ்சு கட்சிகளை அட்ரஸ் இல்லாமல் பண்ணிருக்காப்ல… அவரை நான் உடனே பார்க்கனும் யா….!

 

william Fernandez  கேப்டன் 50 வயதுக்குள் இருக்கும் தொண்டர்களிடம் சரிசமமாக கழகபொறுப்புகளை சட்டசபைவாரியாக கொடுத்து கட்டமைபை கட்ட வேண்டுகிறேன். அண்ணியாருக்கு தலைமை பொறுப்பு வழக்கி நீங்கள் விலகியிருங்கள் சில நாட்கள்.

 

Adlin Mini Dmdk சூரியனை பார்த்து நாய் குரைத்தால் சூரியனுக்கு எந்த பாதிப்பும் இல்லை, நாய் வாய் வலிக்கும் போது குரைப்பதை நிறுத்தி விடும், நீங்கள் சூரியன்.  உங்களோடு களத்தில் உள்ள விண்மீன்கள் நாங்கள். ஜொலிப்போம், சாதனை படைப்போம்,

Vijaya Chandraseker தமிழ் நாட்டின் இயற்கை வளத்தை காப்பாற்ற மறு ஓட்டு பதிவு அவசியம் நேர்மையான அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராடுங்கள். இதை அனைவருக்கும் பகிருங்கள்.

 

Dmdk Muthu Kumar #தமிழன்_என்று_சொல் படம் மிகப்பெரிய வெற்றியை தழுவ எனது வாழ்த்துக்கள்

 

Bala Raman மாற்றம் வேண்டும் என நினைத்தவர்கள் எல்லோரும் அவர்கள் வாக்குகளை எல்லாம் பாமக தேமுதிக நாம் தமிழர் கட்சி என வாக்களித்து வாக்குகளை பிரித்து விட்டனர். திமுக அதிமுக வை ஓழிப்போம் என்று சொன்ன அனைவரும் தேமுதிக பாமக நாம்தமிழர் மநகூ ஓன்று சேர்ந்திருந்தால்.. நிச்சயம் மாற்றம் வந்திருக்கும்.
ஆனால் முதலமைச்சர் போட்டி என சுய நல வீம்புகளால் மாற்றம் நிகழாமல் போனது..

Bala Raman தோல்வியை கண்டு மனம் உடைய வேண்டாம் கேப்டன்..நம் குறிக்கோள் மாற்றம்..அதிமுக திமுக வை அழித்து நிச்சயம் ஓரு நாள் கேப்டன் தலைமையில் மாற்றம் வரும் வரை ஓய மாட்டோம்..

 

Yoga Raj எதையும் தாங்கும் மனத் தைரியத்தோடு,தலைவர் என்ற முழுத்தகுதியோடு சோர்வடையாமல் அவர் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். வாழ்த்துக்கள் அண்ணா

Paris Gulam நல்ல பேச்சளார் என்று நீங்கள் பேர் எடுத்து போபத்தை குறைத்து புது பொலிவுடன் வாருங்கள்.  நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம்!

Jothi Vel தோல்வி எங்களுக்கு (தே.மு.தி.க) இல்லை. மக்களுக்கு மட்டுமே இன்று இவர்கள் பெற்ற 500, 1000 த்தின் பலன் வரும் ஐந்தாண்டு களில் நிச்சயம் மக்களுக்கு தெரியும். ஏதோ நியாயமாக வெற்றி ப்பெற்றதாக சொல்கிறார்கள் இவர்கள் வெற்றி எந்த முறையில் கிடைத்தது என்று எல்லோருக்கும் தெரியும்.

 

 

Shakul Hameed தலைவன் வைகோ விரித்த வலையில் விழுந்து பிரேமலதா ஈகோ தான் வீழ்ச்சியானது, சினிமாவுக்கான வேலையாவது பாருங்கள்

2

Kanag Dmdk நீங்கள் செய்த தர்மத்துக்கும், உங்களின் நல்ல உள்ளத்திற்கும் வரும் காலம் உங்களை முதல்வர் ஆக்கும்

Satz Sathish தலைவா உன் தரிசனத்திற்காக காத்திருக்கின்றோம் நாம் இனி மக்களுடன் மட்டுமே கூட்டணி…

 

 

Boopathi A ரீ எலக்சன் வக்கறோம் உளுந்தூர்பேட்டைய தட்றோம் தூக்கறோம்!!!!

 

Mano Mano என்ன மொதலமைச்சர் வேட்பாளரே…., சௌக்கியமா.

– இவ்வாறு பலவிதமாக பின்னூட்டமிட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.