கேப்டன் ராகுல் அதிரடி அரைசதம் – 13 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் பஞ்சாப் அணி, 13 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை அடித்துள்ளது.

கேப்டன் ராகுல், 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 53 ரன்களை சேர்த்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல், 28 பந்துகளில், 40 ரன்களை மட்டுமே சேர்த்து அவுட்டானார். அவற்றுள் 2 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகள் அடக்கம்.

மயங்க் அகர்வால் 14 ரன்களுக்கெல்லாம் நடையைக் கட்டினார். தற்போது ராகுலுடன் தீபக் ஹூடா இணைந்துள்ளார். இவர் தற்போது அதிரடியாக ஆடிவருகிறார்.

பஞ்சாப் அணியின் ரன்வேகம் இப்படியே தொடரும் பட்சத்தில், அந்த அணி 20 ஓவர்களில் 200 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன், மொத்தம் 8 பவுலர்களை இதுவரை பயன்படுத்தியுள்ளார் என்பதுதான். ஆனாலும், அவர் நினைத்தது நடக்கவில்லை.