இங்கிலாந்தில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய வீரர் சாதனை

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உள்ளூர் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வாக் முதல் இன்னிங்சில் 10விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் அங்கு நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
sreikanth
இந்திய அணியின் ஆல்ரவுடரான ஸ்ரீகாந்த் வக் இங்கிலாந்தில் உள்ள ஸ்டாகிஸ்லே கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். திங்கட்கிழமை மிடில்புரோக் அணிக்கு எதிராக ஸ்டாகிஸ்லே கிளப் அணி விளையாடியது. இதில் 11.4 ஓவர்களுக்கு பந்துக்களை வீசிய ஸ்ரீகாந்த் வாக் 39 ரன்களை மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியாவின் ராஞ்சி டிராபி போட்டியில் விதர்பா அணிக்காக ஸ்ரீகாந்த் வாக் விளையாடி வந்தார். ஐபிஎல் போட்டிகளில் இவர் 2009ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காவும், 2010,2011ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார்.