கார் விபத்து: நடிகரின் மகன், மகள் உட்பட நால்வர் பலி

மதுரை:

துரை மாவட்டம் கொட்டம்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நடிகரின் மகன் மகள் உட்பட நால்வர் பலியானார்கள்.

acci_liveday

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் செந்தில்குமரன்.(வயது42). இவர் மாசிலாமணி உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.  இவர் தனது மனைவி விஜயலட்சுமி, மகன் சாய்கவின்,மகள் சாய்தென்றல் ஆகியோருடன் தனது காரில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே காரில் பயணித்துக்கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் நின்றிருந்த காரில், செந்தில்குமரனின் கார் மோதியது. இதில் செந்தில் குமரனின் மகன் மற்றும் மகள் பலியானார்கள். அதே போல நின்றுகொண்டிருந்த காரில் இருந்த லுக்கா ஹக்கீம் என்பவரும் பலியானார். இவர், திருச்சியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

இவரது காரின் முன் டயர் திடீரென வெடித்ததால், சாலையோரம் காரை நிறுத்தி இருந்தார்.  அப்போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது.

3

காயமடைந்த மற்றவர்கள் மேலூர் அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

கார்ட்டூன் கேலரி