மத்திய அமைச்சரின் மனைவி சாலை விபத்தில் உயிரிழப்பு

கார்வர்:
த்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில், அவரது மனைவி உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சரும், கோவா வடக்கு தொகுதி பாஜக எம்.பி.யுமான இருந்து வருபவர் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக். இவர் தனது மனைவி விஜயா நாயக், உதவியாளா் தீபக் ராமதாஸ் உள்ளிட்ட 4 பேருடன் கோவாவில் இருந்து கா்நாடக மாநிலம், வட கன்னட மாவட்டத்திலுள்ள எல்லாப்பூருக்கு காரில் பயணம் செய்துள்ளார்.

இவர் சென்ற கார் அங்கோலா வட்டம், ஹொசகம்பி கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் படுகாயம் அடைந்தார். அவரது மனைவி உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த அமைச்சர் அருகில் உள்ள மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.