கார் உடைக்கப்பட்ட வழக்கு: கருணாஸ் கார் ஓட்டுநர் 3 பேர் தற்கொலை முயற்சி

நாங்குனேரி:

நெல்லையில் தேவர் சமுதாய அமைப்பு நிர்வாகியின்  கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது,  கருணாசின்   கார் ஓட்டுநர் கார்த்திக், சுப்பையா, சாமித்துரை ஆகியோர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றபோது,  விழாவுக்கு சென்ற கருணாஸ் மற்றும் அவரது கட்சியினர், தமிழ்நாடு தேவர் பேரவைத் தலைவர் முத்தையாவின் காரை தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து  நெல்லைமாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் கருணாஸ் உள்பட அவரது கட்சி நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் கருணாஸ் தற்போது ஜாமினில் உள்ளார்.

இந்த நிலையில், கருணாசின் கார் டிரைவர்கள் கார்த்திக், சுப்பையா, சாமித்துரை  ஆகியோரை நாகங்குனேரி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இநத் நிலையில்,  போலீசார் தங்களை   தாக்கியதாக கூறி நாங்குநேரி காவல் நிலையத்தில், கருணாஸ் கார் டிரைவர்கள் 3 பேரும்  மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனா்.

இதையறிந்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் உடினயாக   நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.