ஐதராபாத்தை சேர்ந்த உபர் நிறுவன கார் டிரைவர் ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூ. 7 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட்செய்யப்பட்டு அவருக்கே தெரியாமல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டுபிடித்த வருமான வரித் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிபதற்கான நடவடிக்கை என்று கூறி, கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. டிசம்பர் 30-ந்தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று மத்திய அரசு.
 

இதையடுத்து, கருப்பு பணம் பதுக்கியவர்கள் பலர், வங்கிகளில் செயல்படாத கணக்குகளில் கோடிக்கணக்கில் செல்லாத ரூபாய்களை டெபாசிட் செய்து, அதை தங்கள் கணக்கில் மாற்றி வெள்ளையாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதனால் வங்கி கணக்கு வழக்குகளை வருமான வரித்துறை இதை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியது. ஐதராபாத்தைச் சேர்ந்த உபர் நிறுவன கால் டாக்சி டிரைவர் ஒருவர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறார். ஆனால், பல ஆண்டுகளாக இந்த வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யாததால், செயல்படாமல் இருந்தது.
இந்த நிலையில், அவரது வங்கிக்கணக்கில் நவம்பர் 2-வது வாரத்துக்கு பின், ரூ. 7 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ நவம்பர் 2-வது வாரத்துக்கு பிறகு, அடுத்த சில வாரங்களில் கால் டாக்சி டிரைவர் கணக்கில் ரூ. 7 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, அந்த பணம், ஆர்.டி.ஜி.எஸ். முறையில், நகைக் கடை அதிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது, தனக்கு ஏதும் தெரியாது, அந்த வங்கிக் கணக்கில் நீண்ட காலமாகவே தான் பராமரிக்க வில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் வங்கிக்கு, அந்த டிரைவரை அழைத்துச் சென்று, வங்கியில் உள்ள, கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர் வருமானவரித்துறையினர். கேமராவில், அந்த டிரைவருடன் இருவர் வந்து சென்றது பதிவாகியிருக்கிறது.
அந்த இருவரையும் விசாரித்ததில், ரூ. 7 கோடிக்கும் தங்கக்கட்டிகள், தங்கநகைகள் வாங்கியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தில் அந்த ரூ. 7 கோடிக்கான வரியைச் செலுத்துவதாகவும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்
“பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின்படி, அந்த ரூ.7 கோடியில் ரூ.3.5 கோடி வரியாகவும், மீதமுள்ள தொகையில், 25 சதவீதம் 4 ஆண்டுகளுக்கு வட்டியில்லா டெபாசிட்டாகவும் செய்யப்படும்
என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.