ஒருமணி நேரத்துக்கு ரூ.20: கடற்கரையில் வாகனங்கள் நிறுத்த இனி கட்டணம்

சென்னை:

சென்னை வாழ் மக்களின் பொழுதுபோக்கிடமான மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் வாகனங்கள் நிறுத்த இனிமேல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடற்கரை பகுதியில் நிறுத்தப் படும் மவாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கார் நிறுத்த 1 மணி நேரத்துக்கு ரூ.20 எனவும், இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 வசூலிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள் ளது. இது மக்களிடைய  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையின் முக்கிய அடையாளமே அழகுமிகு மெரினா கடற்கரைதான். உலகின் மிக நீண்ட கடற்கரையான மெரினாவில், சிறுவர்கள் முதல் முதியோர் கள் வரை பெரும்பாலோர் காலை மாலை நேரங்களில் ஓய்வெடுக்கவும், கடலில் காலை நனைத்து, கடல் மணலில் விளையாடியும் பொழுதை போக்கி  வருகின்றனர். இளஞ்ஜோடிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கடற்கரையில் கடலை போட்டு வருவார்கள்.

இந்த நிலையில், பொதுமக்கள் கடற்கரைக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. குறைந்த பட்ச கட்டண மாக ஒரு மணி நேரத்திற்கு காருக்கு ரூ.20 ஆகவும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 என்றும் நிர்ணயித்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடற்கரைக்கு குடும்பத்தோடு வருபவர்கள் சில மணி நேரங்களாவது கடற் கரையில் பொழுதை கழிக்க விரும்புவார்கள். ஆனால், தற்போது மாநகராட்சி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வாடகையை உயர்த்துவதாக அறிவித்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய மாநகராட்சி அதிகாரி,  மெரினா மற்றும் எலியட்ஸ் கடற் கரையில் வாகனங்கள் மணிக்கணக்கில் விடப்படுவதால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு வாகனங்களுக்கு கட்டணங்களை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது என்று கூறினார்.