கார் பதிவு மோசடி: பிரபல “ஒல்லி” ஹீரோவும் சிக்குகிறார்?

ரி ஏய்ப்பு செய்ய திட்டமிட்டு, கார் பதிவில் மோசடி செய்ததாக நடிகை அமலா பால் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் பிரபல ஒல்லி நடிகரும் இந்த விவகாரத்தில் சிக்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த அமலாபால், “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை அமலாபால் 1 கோடி ரூபாய்க்கு , மெர்சிடிஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கினார். இந்தக் காரை கேரளாவில் பதிவு செய்தால் கணிசமான தொகை சாலை வரியாக கட்ட வேண்டும். இதைத் தவிர்க்க புதுச்சேரியில் வேறு ஒரு இளைஞரின் பெயரில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி தனது காரை அமலாபால் பதிவு செய்துள்ளார். இது சட்டப்படி தவறு.

ஏனென்றால் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, அங்கு கார் பதிவுசெய்ய முடியும். தவிர தன் பெயரில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த இளைஞருக்கே தெரியாது. இந்த விவகாரம் இப்போது வெடித்துள்ளது. குற்றச்சாட்டு உறுதியானால் அமலாபாலுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்த்திரையுலகில் பிரபலமான “ஒல்லி” நடிகரும் இதே போல கார் வாங்கியிருப்பதாக தகவல கசிந்துள்ளது.

“கேரளா போலவே தமிழக்திலும் கார்களுக்கு சாலை வரியாக கணிசமான தொகை செலுத்த வேண்டும். ஆகவே தமிழகத்திலும் சிலர் குறுக்கு வழியில் பாண்டிச்சேரியில் தங்கள் வாகனத்தை பதிவு செய்கிறார்கள். திரையுலகினர் சிலர் குறிப்பிட்ட ஒரு புரோக்கர் மூலம் பாண்டிச்சேரியில் சட்டத்துக்குப் புறம்பாக பதிவு செய்கிறார்கள். அமலாபால் காருக்கு பதிவு ஏற்பாடு செய்த அதே புரோக்கர்தான் சமீபத்தில் ஒல்லியான தமிழக ஹீரோ வாங்கிய காருக்கும் புதுச்சேரியில் பதிவு செய்துக் கொடுத்திருக்கிறார். தவிர அமலாபால் கார் பதிவு செய்ய கொடுக்கப்பட்ட அதே முகவரிதான் அந்த ஒல்லி ஹீரோவின் காரை பதிவு செய்யவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த ஹீரோ மீதும் விரைவில் நடவடிக்கை பாயலாம்” என்று தகவல் கசிந்துள்ளது.

3 thoughts on “கார் பதிவு மோசடி: பிரபல “ஒல்லி” ஹீரோவும் சிக்குகிறார்?

Leave a Reply

Your email address will not be published.

You may have missed