சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளை நடிகர் கமல் ஹாசன் அவமானப்படுத்தியுள்ளதாக கர்நாடக இசைக் கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இன்ஸ்டகிராமில் கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் நேரலையில் உரையாடி வருகின்றனர் .எப்படிப்பட படங்களைச் செய்யவேண்டும் என எப்படி முடிவெடுத்தீர்கள் என்கிற விஜய்சேதுபதி கேள்விக்கு கமல்:-
இது டிக்கெட் போட்டு செய்கிற வியாபாரம் தானே. தர்மத்துக்கு நான் பாடும் பாட்டில்லையே. தியாகராயர் எப்படி ராமனைப் போற்றி தஞ்சாவூர் வீதியில் பிச்சையெடுத்துப் பாடினாரோ அப்படிப்பட்ட கலையில்லையே. எனக்கு கார் வாங்க வேண்டுமென்று ஆசை, டிக்கெட் விற்கவேண்டும் என்று ஆசை. எம்.ஜி.ஆர். மாதிரி, சிவாஜி மாதிரி ஆகவேண்டும் என்று ஆசை. பிறகு மக்களை மகிழ்விக்கமாட்டேன் என்று என்ன வீம்பு? அவர்களுக்கு என் கலை புரியவில்லையென்றால் அவர்களை அங்குக் கொண்டுவரவேண்டுமே தவிர, நான் போய் தனியாகக் காட்டில் மகரிஷியாக உட்கார்ந்து கொள்ள முடியாது, அவர்களுடன் சேற்றில் குளித்தும் குளிக்காமலும் இருக்க முடியாது. அவர்களுடைய நண்பனாகவும் ஆசிரியனாகவும் விதூஷகனாகவும் கோமாளியாகவும் எல்லாமுமாக நாம் மாறவேண்டும் என்று கூறினார்.
கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் குறித்து அவர் பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
கர்நாடக இசை சமூகத்தை ஆத்திரப்பட வைத்துள்ளது. பிரபல பாடகரான பால்காட் ராம்பிரசாத் நடிகர் கமல்ஹாசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு மனுவை உருவாக்கியிருக்கும் அவர், நடிகர் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கமல் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடகர் பாலக்காடு ராம்பிரசாத் இணையத்தில் தொடங்கிய ஆன்லைன் பெட்டிஷனில் 11,000 பேர் கையெழுத்திட்டு, தங்கள் கோரிக்கைக்கு இணைய வழி ஆதரவு திரட்டி வருகிறார்கள்.