Random image

தன்பாலினச் சேர்க்கை சட்டப்பிரிவு 377 ரத்து – திருநங்கைகளுடன் இணைந்து பாட்டுப்பாடி கொண்டாடிய பிரபல பாடகர்

தன்பாலின சேர்க்கை குற்றமாக கருதும் சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை கொண்டாடும் விதமாக, பிரபல கர்நாடக பாடகர் டிஎம் கிருஷ்ணா, திருநங்கைகளுடன் இணைந்து பாட்டு பாடியுள்ளார்.

krishna

நேற்று முன் தினம் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. தன்பாலின உறவு முறை இந்தியாவில் குற்றமாக கருதும் சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்து தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்சு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை பலர் வரவேற்று வரும் நிலையில், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு திருநங்கைகள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்களின் வாழ்க்கை முறைக்கு ஒரு ஆதாரமாகவே உள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை கொண்டாடும் விதமாக பிரபல கர்நாடக பாடகர் டிஎம் கிருஷ்ணா திருநங்கைகளுடன் இணைந்து இசைக்கச்சேரி நடத்தி உள்ளார். திருநங்கைகளுடன் தான் இணைந்து பாட்டுப்பாடிய வீடியோவை இணையத்தில் பதிவிட்ட கிருஷ்ணா, ” தீர்ப்பை இசையுடன் சேர்ந்து நாம் கொண்டாடுவோம் ” என குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் வசிக்கும் திருநங்கைகளை குறிப்பிடும் ஜொகாப்பா இனம் அதிகளவில் வடக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் வசிக்கின்றனர். இவர்கள் இசை, நடனம், பாடல் உள்ளிட்டவற்றில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து தான் கிருஷ்ணா பாட்டிப்பாடி உள்ளார். இசைக்கச்சேரியில் மராத்தி மற்றும் கன்னட பாடல்களை, கர்நாடக இசைக்கருவிகளை பயன்படுத்தி கிருஷ்ணா பாடினார். அவர்களுக்கு பின்னால் திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை குறிப்பிடும் கொடியும் இடம்பெற்றிருந்தது.