ஸ்ரீஹரிகோட்டா:

கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட்டை  இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

இந்த செயற்கைகோளில் இந்தியாவை சேர்ந்த  செயற்கைகோளுடன் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த 1 நானோ செயற்கைகோள் ஆக மொத்தம்  31 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இறுதி கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது. இதைத்தொடர்ந்துஇன்று காலை 9.29 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்டோசாட் 2இ செயற்கைக்கோள் பூமியில் இருந்து 550 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.