ஸ்ரீஹரிகோட்டா: ராணுவத்திற்கு உதவும் வகையிலான செயற்கைக் கோள் இன்று (நவம்பர் 27) காலையில், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதன் பெயர் கார்டோசாட் – 3.

இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி – சி47 என்ற ராக்கெட்டின் உதவியுடன் ஏவப்படவுள்ளது.

ராணுவ ஆய்வு நோக்கத்திற்காகப் பயன்படும் வகையில், கார்டோசாட் – 3 என்ற இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயற்கைக்கோளுடன் சேர்த்து அமெரிக்காவின் இதர 13 செயற்கைக்கோளையும் சுமந்தபடி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி – சி47 ராக்கெட்.

இன்று காலை சரியாக 9.28 மணிக்கு அந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த செயற்கைக்கோள் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.

அதில் பொருத்தப்பட்ட நவீனரக கேமராக்கள் நாட்டின் எல்லைப் பகுதிகளை நுட்பமாக படம் எடுத்து, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.