டில்லி,

2ஜி வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ நிதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.

இதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சியினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். திமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த வழக்கில்,  குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டதாக நீதிபதி கூறியிருந்தார்.

இந்நிலையில், சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாமி, அரசு உடடினயாக இதுகுறித்து டில்லி உயர்நீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்து தனது நேர்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் என  பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதா வழக்கில் முதலில் விடுதலை செய்து மீண்டும் தண்டனை வழங்கப்பட்டதுபோல் 2ஜி வழக்கிலும் நிலைமை மாறும் என்றும் மற்றொரு டுவிட்டர் பதிவில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்