குடிபோதையில் தாக்கியதாக எம்.எல்.ஏ. நடிகர் கருணாஸ் மீது புகார்

சென்னை:

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் நண்பர்களுடன் குடிபோதையில் தன்னை தாக்கியதாக பரணிதரன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

எம்ஆர்சி நகர் நட்சத்திர ஓட்டலில் தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த கருணாஸ் தன்னை தாக்கியதாக பரணிதரன் தெரிவித்துள்ளார்.

அவரது புகாரை அடுத்து ஆறு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.