சென்னை

யில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல உலக நாடுகளில் பரவி உள்ளது.  இந்தியாவில் சுமார் 4000க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தனிமைப்படுத்த வேண்டி உள்ளது.

இதற்கான தனிமை வார்டுகள் பற்றாக்குறையால் ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டாக்க இந்திய ரயில்வே முன் வந்தது.  மொத்தம் தீர்மானிக்கப்பட்ட 5000 பெட்டிகளில் இதுவரை 3000 பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றுவதற்குப் பதில் தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  செங்கல்பட்டைச் சேர்ந்த முனுசாமி என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் முனுசாமி தரப்பில் ரயில் பெட்டிகளில் வெண்டிலேட்டர் போன்றவற்றை வைக்க வசதி இருக்காது எனவும் அதனால் தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.  இதற்கு வரும் 9 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு இட்டுள்ளார்.