பொறியியல் ஆன்லைன் விண்ணப்ப முறையை எதிர்த்து வழக்கு: அண்ணா பல்கலைக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை:

மிழகத்தில் இந்த ஆண்டு முதல் அண்ணா பலைக்கழகம் மூலம் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள்,  பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி இன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  திமுக எம்எல்ஏ எழிலரசன், வழக்கறிஞர் பொன்பாண்டியன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம், மற்றும்  உயர்கல்வி செயலருக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.