ரிசர்வ் வங்கி முன்னாள் துணை கவர்னர் மீது வழக்கு

வங்கி கடன் மோசடி விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி மாஜி துணை கவர்னர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

ரிசவர் வங்கி  துணை கவர்னர் கே.சி. சக்கரவர்த்தி, 2009-2014 காலகட்டங்களில் பணியாற்றினார். அப்போது டில்லியைச் சேர்ந்தஒரு நிறுவனத்திற்கு ஐ.ஓ.பி. மூலம் முறைகேடாக ரூ.41 கோடி கடன் பெற்று தர அவர் உதவியதாக புகார் எழுந்தது.

கடந்த ஏப்ரல் மாதம், இரண்டு முறை சி.பி.ஐ. அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப் பதிவு செய்தனர்.

மீண்டும் விசாரணை நடத்திட அவரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்   லண்டன் தப்பியோட முயன்றா, சக்கரவர்த்தியை சி.பி.ஐ. கைது செய்ததாக தகவல் வெளியானது. இத்தகவலை மறுத்த சி.பி.ஐ. வட்டாரம், விசாரணைக்கு மட்டுமே சக்கரவர்த்தி அழைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கின்றன.