ஷாலினி பாண்டே மீது மோசடி வழக்கு…!

--

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் நவீன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘அக்னிச் சிறகுகள்’. இந்தப் படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே நடித்துள்ளனர் . ஆனால் தற்போது ஷாலினி பாண்டே நீக்கப்பட்டு அக்‌ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

10 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு ‘100% காதல்’ என்ற படத்தில் நடித்தவர் ஷாலினி பாண்டே 100 நாட்கள் இந்தப் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கினார் .ஷாலினி பாண்டேவை வைத்து 27 நாட்கள் ஷுட் பண்ணினோம்.15 லட்ச ரூபாய் அட்வான்ஸும் கொடுத்தோம். 45 நாட்கள் தொடர் தேதிகள் குடுத்துவிட்டு தனக்கொரு இந்திப் படம் வருகிறது. ஆகையால் தேதிகளில் கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்றார்.அதை ,மறுத்ததற்கு 10 நாள் தான் தரமுடியும். 7 நாள் தான் தரமுடியும் எனத் தகராறு பண்ணத் தொடங்கினார்.

இது தொடர்பான வாட்ஸ்-அப் உரையாடல் மற்றும் அவர் ஒப்புக்கொண்ட தேதிகள் எல்லாம் இருக்கு என வாதம் ஏற்பட்டது . ஹைதராபாத்தில் அந்தப் பெண்ணை நேரிலும் சந்தித்துப் பேசினோம். ’நான் இந்தியில் நடிக்கத் தான் வந்துள்ளேன். எனக்குத் தென்னிந்தியப் படங்களைப் பற்றி பிரச்சினையில்லை. ரன்பீர் கபூர் படம் கிடைத்த பிறகு, எதுவானாலும் செய்துவிடுவேன். யாஷ்ராஜ் நிறுவனத்தில் படம் பண்ணுகிறேன். இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் வரமாட்டேன்’ என்று ஷாலினி பாண்டே சொன்னதாக தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்குப் பிறகு ஷாலினி பாண்டே லைனிலேயே வரவில்லை. தொடர்பு கொள்ளவும் முடியவில்லை .அக்‌ஷரா ஹாசனை நாயகியாக வைத்து 45 நாட்கள் படப்பிடிப்பை முடித்துத் திரும்பிவிட்டோம்.அக்‌ஷரா ஹாசனை மனதில் வைத்துத்தான் இந்தக் கதையை இயக்குநர் நவீன் எழுதியிருக்கிறார். ‘என புது கதையில் குதித்திருக்கிறார். நீதிமன்றத்தில் மோசடி வழக்கு ஒன்று தொடர்ந்து, ஷாலினி பாண்டேவுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. எங்களுடைய நோக்கம் அவரை அசிங்கப்படுத்துவது கிடையாது.அவரை வைத்து ஷுட் பண்ணிய பணம் எனக்குத் திரும்ப வரவேண்டும் என கூறியுள்ளார் .