ஸ்டெர்லைட் மூடப்பட்டதை எதிர்த்து வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை

--

டில்லி:

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் மற்றும் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு செய்திருந்தது. இந்த மனுமீது கடந்த 5ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசின் அரசாணைக்கு  தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.

மேலுரும், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடந்த 5ஆம் தேதி பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும்  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணை நடைபெற உள்ளது.