தொல்லியல்துறை படிப்பில் தமிழ் புறக்கணிப்பு எதிர்த்து வழக்கு! உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

--

மதுரை : தொல்லியல்துறை படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

மத்திய தொல்லியல்துறை பட்டய படிப்புக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.   மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப்  பட்டயப் படிப்புக்கான குறிப்பு ஆணையை வெளியிட்டு, முதுகலைப் பட்டம் பெற்று இருப்போர் விண்ணப்பிக்கலாம் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளது. அதில், வரலாறு. தொல்லியல்துறை, மானிடவியல் மற்றும் செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் தொல்லியல் துறையின் முதுகலைப் பட்டப் படிப்புக்கான கல்வித் தகுதியில்  செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிப்புக்கு  அரசியல் கட்சியினர், தமிழ்ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தொல்லியல் படிப்பில் தமிழ் புறக்கப்பணிக்கப்பட்டதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அழகுமணி என்பவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனவை   நாளை அவசரமாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

You may have missed