சனம் ஷெட்டி அளித்த புகாரின்பேரில், தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு….!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை சனம் ஷெட்டி.

இவருடன் படப்பிடிப்பு களின் போது பிக் பாஸ் புகழ் மற்றும் நடிகர் தர்ஷன் நெருக்கமாகியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவர் மீது நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் காதலித்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு மே மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் ஜூன் மாதம் திருமணமும் நடக்க முடிவு செய்திருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதால் நிகழ்ச்சி முடிந்த பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.

மேலும் நமக்கு நிச்சயம் நடந்தது பற்றி வெளியில் கூறினால் பெண்கள் ரசிக்க மாட்டார்கள் என தர்ஷன் கூறினார். தர்ஷன் வெளிநாட்டில் ஷூட்டிங் செல்வதற்கு ரூ.15 லட்சம் வரை செலவழித்தேன். நிகழ்ச்சி முடிந்த பின்பு என்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். அவரது பெற்றோரும் அதற்கு உடந்தை. எனவே, என்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.என புகார் அளித்திருந்தார் .

இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின்பேரில், நடிகர் தர்ஷன் மீது அடையாறு மகளிர் காவல் நிலைய போலீஸார் பெண் வன்கொடுமை சட்டம், மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.