மாலத்தீவு: தேர்தல் முடிவுக்கு எதிராக வழக்கு:  முன்னாள் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

னது தோல்வியை ஏற்காமல் தேர்தல் முடிவுக்க எதிராக வழக்கு தொடுத்துள்ள மாலத்தீவு அதிபரை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவை ஏற்காத யாமீன் தேர்தலில் முறைகேடு இதை மாலத்தீவு தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றது. அதனால் 89.2 சதவீதம் ஓட்டுகள் பதிவானது என ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் தோல்வி அடைந்ததால்   யாமீன் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும். புதிய அதிபர் இப்ராகிம் முகமது சாலிக் வருகிற நவம்பர் 17-ந்தேதி பதவி ஏற்க வேண்டும்.

ஆனால், மாறாக தேர்தல் முடிவை எதிர்த்து மாலத்தீவு உச்சநீதிமன்றத்தில் யாமீன் மனு செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாமீனுக்கு  எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தலைநகர் மாலேவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

 

கார்ட்டூன் கேலரி