சபாநாயகருக்கு எதிராக வழக்கு! டிடிவி தினகரன்

சென்னை,

னது ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சபாநயகரின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்றும் கூறி உள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதலில் உச்சக்கட்டமாக, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக அந்த தொகுதிகள் காலியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையிலான அரசு, குறுக்கு வழியில் பெரும்பான்மையை காட்ட எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்துள்ளனர்.

மேலும், சபாநாயகர் தனபால் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்றும், நீதிமன்ற அனுமதியோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வோம், துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இது ஜனநாயக படுகொலை எனவும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி