சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை வெளியிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழகத்தில்கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. மேலும் ஏராளமானோர் தப்லிஜி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் நாராயணன் என்பவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட  நபர்களின் பெயர் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வமாக அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று   நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்ட விசாரணையின்போது,  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21ஆவது பிரிவின் படி ஒருவரின் விவரங்களை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது.மேலும் பாதிக்கப்பபட்டவர்களின் பெயரை வெளியிட்டால் அதனால் சமூகத்தில் தேவையற்ற பிரச்னை ஏற்படும். மேலும் இந்திய மருத்துவ ஆராய்சிச்சி கவுன்சில் நோயாளிகளின் பெயர்களை வெளியிடக்கூடாது என கூறப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள்,  வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.