மலேசியாவுக்குத் தனி விமானம் மூலம் செல்ல முயன்ற 10 பேர் மீது வழக்கு
சென்னை
மலேசியாவுக்குத் தனி விமானம் மூலம் செல்ல முயன்ற 10 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் 25%க்கும் அதிகமானோர் டில்லி நிஜாமுதினில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டுக்குத் தொடர்பு உடையவர்கள் ஆவார்கள்.
இவர்களில் பலர் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்துள்ளனர்.
ஒரு சிலர் கொரோனா பாதிப்பு இருந்தும் பல ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.
இதனால் நாட்டில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களில் மலேசியாவை சேர்ந்த 10 பேர் தனி விமானம் மூலம் தங்கள் நாட்டுக்குச் செல்ல முயன்றுள்ளனர்.
காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா