தூத்துக்குடி சம்பவத்தை போலீஸ் உடையில் கண்டித்த நடிகை மீது வழக்கு

சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் கண்டித்து பேசிய டி.வி. நடிகை நிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சன் டிவி.யின் ‘தென்றல்’ தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை நிலானி. இவர் என் இனிய தோழி, பைரவி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து போலீஸ் உடையில் பேசிய வீடியோ வைரலானது.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் பெண் போலீஸ் அதிகாரி தான் கண்டித்து பேசுவதாக நம்பினர். இது குறித்து ரிஷி என்பவர் வடபழனி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நிலானி மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.