Random image

உயர்நீதிமன்ற அவதூறு பேச்சு….ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில்பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர் நீதிமன்றம் குறித்து அவர் அவதூறாக பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுதல், நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது