மெரினாவில் உள்ள நினைவிடங்களை மாற்ற கோரி வழக்கு!

 

மதுரை,

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் நினைவிடங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க  மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் மனு  தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையை  கடலோர பாதுகாப்பு மண்டலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு தலைவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது சட்டத்துக்கு புறம்பானது. அதை அகற்றி வேறு எங்காவது அமைக்கலாம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி,  இதுதொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.