கர்நாடகாவில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட ராகுல்காந்தி

டில்லி:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் உள்ள சில ஷரத்துக்களை  எதிர்த்து கர்நாடகாவை சேர்ந்த  இந்து அமைப்பு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து உள்ளதுமு.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் நாளை மறுதினம் (12-ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் (ஏப்ரல்) 27ந்தேதி தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டார்.

காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஜாதி மற்றும் மதம் சார்ந்த விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் நடவடிக்கையில் துவங்கிய பின் அதில் எந்த ஒரு நீதிமன்றமும் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது