1,513 போலி மருத்துவர் மீது வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை:

மிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1,513 போலி மருத்துவர்கள்  மீது வழக்குப் பதிவு  செய்ப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்,  தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், , 22 ஆண்டுகளுக்குப் பின் கிளினிக்கல் எஸ்டாபிலிஷ்மெண்ட் எனும் முறைப்படுத்தும் சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சட்டம் காரணமாக மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்கும், ஏழை மக்களுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்கும் என்றவர், தரமற்ற, போலி மருந்துகள் விற்பனையை ஒழுங்குப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

ஆன்லைன் மூலம் மருத்துவமனை அங்கீகாரம் பெறலாம் எனவும் கூறிய அமைச்சர், உரிய விதிகளைப் பின்பற்றும் மருத்துவமனைகளுக்கு இச்சட்டம் ஒரு கூடுதல் பலம் அளிக்கும் என்றார்.

மேலும், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் போலி மருத்துவர்கள் தடுக்கப்பட்டு உள்ளனர் என்றும், இதுவரை 1,513 போலி மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.