மகாபாரத பேச்சு வழக்கு தள்ளுபடி!! கமல் வரவேற்பு

தஞ்சை:

நடிகர் கமல்ஹாசல் மகாபாரதம் குறித்து டிவி பேட்டியில் சில கருத்துக்கள் தெரிவித்திருந்தார்.

இதனால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி செயலாளர் பாலா என்பவர் கும்பகோணம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.  அதோடு வழக்கு தொடர்ந்த பாலாவுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

பாலா ஏற்கனவே குஷ்பு போன்ற பிரபலங்கள் மீது வழக்கு தொடர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை கமல் வரவேற்றுள்ளார். நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை பேச்சு சுதந்திரத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய திருப்புமுனை என்று கமல் தெரிவித்துள்ளார்.