கொரோனா அறிகுறியுடன் நடமாடிய சென்னை என்ஜினியர்: 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

--

சென்னை: கொரோனா அறிகுறியால் வீட்டில் இருக்குமாறு கூறிய அறிவுரையை மீறிய என்ஜினியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த 144 தடை உத்தரவு தமிழகத்தில் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல்1ம் தேதி காலை 6 மணி வரையில் நடைமுறையில் இருக்கும்.

அதுசமயம் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம், 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூட வேண்டாம் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக நபர்கள் முத்திரையிடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிடங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், கொரோனா அறிகுறியால் வீட்டில் இருக்குமாறு கூறிய அறிவுரையை மீறிய என்ஜினியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அந்த என்ஜினியிர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். கொரோனா அறிகுறி காரணமாக வீட்டில் இருக்க அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் அதை மீறியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

.