திருச்சி திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக முதன்மை செயலாளரும்,  வேட்பாளருமான கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்தது. இதனைதொடர்ந்து 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறவும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் அதிகாரிகளை மிரட்டும் வகையில்,

வாட்ஸ் அப்-ல் பேசியதாக திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது தேர்தல் அதிகாரிகள் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் முசிறி போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.