அரசியல் தலைவரை இழிவு படுத்தியதாக நடிகை கங்கனா மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு..

 

நம்ம ஊரில் நடிகை கஸ்தூரி போல் இந்தியில் நடிகை கங்கனா ரணாவத், சமூக வலைத்தளங்களில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்து வருபவர் ஆவார்.

ஆனால் கங்கனா நேரடியாக அரசியல்வாதிகளுடன் மோதுவதால் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.

அவர் மீது சில வழக்குகள் உள்ள நிலையில் பீகாரில் புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த கங்கனா, பஞ்சாப் பாடகர் தில்ஜித்துடன் மோதலில் இறங்கினார்.

அந்த பஞ்சாயத்து முடியாத நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரிய லோக்சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாலாவை விமர்சித்ததாக கங்கனா மீது அங்குள்ள கயா சிவில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் பொதுச்செயலாளர் விநய் குஷ்வாலா என்பவர், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

“கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் உபேந்திர குஷ்வாலா புகைப்படத்தை வெளியிட்டு அவரை கிண்டல் செய்துள்ளார். எனவே கங்கனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளேன்” என விநய் தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி