ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல்: மீரா மிதுன் மீது வழக்கு பதிவு

நட்சத்திர ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மீரா மிதுன் மீது சென்னை காவல்துறையினர் சார்பில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை மீரா மிதுன், சென்னை காவலர்கள் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக் கொண்டு, தன் மீது பொய் வழக்குகளை பதிவிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அந்த பேட்டிக்கு ஓட்டல் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரத்தில், ஊழியர்களுக்கு மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஓட்டல் ஊழியர்கள் சார்பில் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட, அப்புகாரின் அடிப்படையில் அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது காவல்துறையினரப் வழக்கு பதிந்துள்ளனர்.

மீரா மிதுன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்திருப்பதால், விசாரணைக்கு அவரை காவல்துறையினர் அழைத்துள்ளனர். ஆனால் அவர் மும்பையில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் எந்நேரமும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Biggboss, chennai, egmore, hotel, meera mithun, Police, press meet, tamilnadu
-=-