வாயைக் கொடுத்து  வாங்கி கட்டிய  மேனகா காந்தி..

வாயைக் கொடுத்து  வாங்கி கட்டிய  மேனகா காந்தி..

நாட்டில் உள்ள ஜந்துக்களுக்கு எல்லாம், தன்னை ‘காட்பாதர்’ ஆக காட்டிக்கொள்பவர், பா.ஜ.க. வின் எம்.பி.யான மேனகா காந்தி.

இப்போது ஒரு வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்.

கேரள ,மாநிலம் பாலக்காடு வனப்பகுதியில் யானை ஒன்று பழத்தில் வெடிவைத்துக் கொடுக்கப்பட்ட கோர சம்பவத்தில் உயிர் இழந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த மேனகா காந்தி சம்மந்தமே இல்லாமல்,’’ மலப்புரம் மாவட்டம் நாட்டில் கிரிமினல்கள் அதிகம் நிறைந்த மாவட்டம்’’ என சொல்லி வைக்க, அங்கு பெரும் பிரளயமே ஏற்பட்டுள்ளது.

யானை எங்கோ கொல்லப்பட, மேனகா காந்தியோ ’’அமாவாசைக்கும், அப்துல் காதருக்குமான’’ பிணைப்பை  இந்த சம்பவத்தில் தொடர்பு படுத்தி இருந்தார்.

யானை மரணத்தில், தேவை இல்லாமல் சிறுபான்மை சமூகத்தினரை இந்த விவகாரத்தில் தொடர்புப் படுத்தி கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி, மேனகா மீது மலப்புரம் காவல் நிலையத்தில் கொத்து கொத்தாக புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிமிடம் வரை 10 புகார் மனுக்கள் வந்துள்ளன.

இதனால், மேனகா காந்தி மீது, மலப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.