முதல்வர் மீது அவதூறுப் பேச்சு : மு க ஸ்டாலின் மீது வழக்கு பதிவு

--

சேலம்

/சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் மீது வழக்கு பதியபட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்போதுஅவர் பேசுகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் குறித்து சில கருத்துக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதை ஒட்டி அரசு தரப்பு வழக்கறிஞர் தனசேகரன் ஒரு வழக்கு மனுவை சேலம் நீதிமன்ற நீதிபதி மோகன் ராஜ் முன்னிலையில் அளித்துள்ளர். அந்த மனுவில் அவர், ”கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று சேலத்தில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்டில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கல்ந்துக் கொண்டு பேசினார்.

மு. க. ஸ்டாலின் தனது பேச்சின் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பாக பேசி உள்ளார். அதனால் அவர் மீது முதல்வரை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.