முன்னாள் முதல்வர் மீது பலாத்கார வழக்கு : கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்

ரிதா நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீது பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.

கேரள நடிகை சரிதா நாயர் சோலார் பேனல் தகடு வழக்கில் மோசடி செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அவர் தனது நிறுவனத்துக்கு வாய்ப்பு அளிக்க அரசியல் வாதிகள் பலருக்கு பணம் அளித்ததாகவும் பணம் வாங்காதவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.

 

அவர் புகார் கூறியவர்களில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் காங்கிரஸ் தலைவர் கே சி வேணுகோபால் ஆகியோர் அடங்குவார்கள். இருவரும் அந்த குற்றசாடை மறுத்தனர். அத்துடன் சரிதா நாயர் மீது அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் முன்பு உம்மன் சாண்டி குற்றச்சாட்டை மறுத்தார். ஆனால் கமிஷனில் அதே குற்றச்சாட்டை சரிதா நாயர் மீண்டும் மீண்டும் தெரிவித்தார்.

அப்போது சரிதா நாயர் தனித்தனியாக புகார் அளித்தால் மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. அதிஅ ஒட்டி தனித்தனியே சரிதா நாயர் புகார் அளித்தார். அந்த புகாரை ஒட்டி தற்போது கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

இந்நிகழ்வு கேரள அரசியலில் மிகவும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.