‘சீதக்காதி’படத்திற்கு தடை கோரி வழக்கு!  இன்று விசாரணை

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் சீதக்காதி ; படத்துக்கு தடை கோரிய வழக்கு இன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதியின் சீதக்காதி திரைப்படம் அவரது  25 ஆவது படமாகும். பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார்.

துள்ளார். இந்தப் படம் இன்று வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சீதக்காதி  படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கீழக்கரையைச் சேர்ந்த முகமது சலையா உசேன் என்பவர் தொடுத்துள்ள இந்த  வழக்கில், வள்ளல் சீதக்காதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கலாம் என்று புகார் கூறப்பட்டுள்ளது.

லும் அவரது மனுவில், பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் சீதக்காதியின் பெயரை படம் நினைவுபடுத்துகிறது.  வள்ளல் சீதக்காதிக்கு ஷெய்க் அப்துல் காதர் என்பது அவரது இயற்பெயராக இருந்தாலும், மக்கள் அவரை வள்ளல் சீதக்காதி என்று அழைத்தார்கள். சீறாப்புராணம் என்ற காவியத்தை எழுதிய உமறுப்புலவருக்கு சீதக்காதி உதவி செய்திருக்கிறார். சேதுபதி சமஸ்தானத்தில் அரசுக்கும் அவர் உதவி இருக்கிறார்

இப்படி பெரும் புகழ் பெற்ற அவரது பெயரில் நாடக கலைஞரின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.  படத்தில் வன்முறை காட்சிகளிலோ, ரொமன்ஸ் காட்சிகளிலோ  இந்த கதாபாத்திரம் நடித்திருக்க வாய்ப்புள்ளது. இதனால், நிஜ வள்ளல் சீதக்காதியை மக்கள்  தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே, இந்தப் படத்தை சீதக்காதி  என்ற பெயருடன் வெளியிட தடைவிதிக்க வேண்டும்  என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு இன்ரு விசாரணைக்கு வருகிறது.