‘இரண்டாம் குத்து’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் ….!

2018ம் ஆண்டு சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பி கிரேட் திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. அதில் கதாநாயகனாக சந்தோஷ் ஜெயக்குமாரே நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் டீசர் ஆகியவை சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதில் ஆபாசம் அதிகமாக இருப்பதாக் சொல்லி படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களை இணையத்தில் இருந்து நீக்கவேண்டும் என மதுரை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை விசாரித்த நீதிபதி கிருபாகரன், யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் மத்திய தணிக்கை குழுவை மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையை எதிர் மனுதாரராக இணைத்து
மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.