டாக்டர்கள் கிறுக்கக்கூடாது’’ அதிரடியாய் வழக்கு..

டாக்டர்கள் தரும் மருந்து சீட்டின் (பிரிஸ்கிரிப்சன்)  ‘ஸ்பெஷாலிட்டியே’’, அவர்களின் ‘கிறுக்கலான’’ எழுத்துதான்.

 ’’நோயாளிகளுக்குப் புரியாத வகையில் எழுதுவது டாக்டர்களுக்கு அழகு’’ என்று சொல்லப்படுவதுண்டு.

இதனை எதிர்த்து தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குப் போட்டுள்ளார்.

நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரமணா ரெட்டி என்பவர் இது தொடர்பாகத் தாக்கல் செய்துள்ள மனுவில்’’ டாக்டர்கள் தாங்கள், எழுதித் தரும்  மருந்து சீட்டில் மருந்தின் பெயரைத் தெளிவாக எழுத சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, இந்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு மத்திய-மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து , இந்திய மருத்துவ சங்கத்தில் முறையிடுமாறு ,மனுதாரரை அறிவுறுத்தியுள்ளது, உயர்நீதிமன்ற அமர்வு.

‘’ நோயாளிகளுக்கு மருந்து பரிந்துரை செய்யும் டாக்டர்கள் தெளிவாக எழுத வேண்டும் என்பது மருத்துவ கவுன்சில் விதியாகும். அதனை டாக்டர்கள் பின் பற்றுவதில்லை’’ என்கிறார், மனுதாரரின் வழக்கறிஞர்.

– ஏழுமலை வெங்கடேசன்