Random image

நில ஆக்ரமிப்பு செய்ய முயன்ற அர்ஜுன் சம்பத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நில ஆக்ரமிப்பு செய்ய முயன்றதாக அர்ஜுன் சம்பத் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது

இந்து மக்கள் கட்சியின் தலைவர், அர்ஜூன் சம்பத். கோவையில் வசிக்கிறார்.

இவர், மீது குற்றம்சாட்டி உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த மஞ்சுளா தெய்வநாயகம் என்பவர் வழக்கு தொடுத்தார்.

 

அவர் தனது மனுவில், “கோவை ஆர்எஸ் புரத்தில் எனக்கு சொந்தமான பரம்பரை நிலம் இருக்கிறது. இதை  பேரூர் கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது என்றுகூறி அத்துமீறி அங்கு கோயில் கட்ட அர்ஜூன் சம்பத் முயல்கிறார். இதை தடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிஎன்.பிரகாஷ், இன்று தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், “குறிப்பிட்டஇடத்தில் எவ்வித கட்டுமானப் பணியும் செய்யக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்கு கோவை காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.