கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியுதவி தடுக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

திருவனந்தபுரம்:

கேரளாவில் வரலாறு காணாத வகையில் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.


கேரள மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று அம்மாநில முதல்-வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதனால் கேரளாவுக்கு உதவிகள் குவிந்து வருகிறது. மத்திய அரசு சார்பில் முதல்கட்டமாக ரூ.600 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதிஉதவி வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. பினராயி விஜயனும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இந்த நிதியை பெறுவதில் சட்ட சிக்கல் இருப்பதால் ஐக்கிய அரசு அமீரகத்தின் ரூ.700 கோடி தங்களுக்கு வேண்டாம் என்று மத்திய அரசு அறவித்தது. கேரளாவுக்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு தடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜப்பான் உள்பட பல வெளிநாடுகள் அளிக்க முன்வந்துள்ள நிதிஉதவியை சட்டத்தை காரணம் காட்டி மத்திய அரசு தடுக்கிறது. நிதி உதவிகள் கேரளாவுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் கேரள முன்னாள் அமைச்சர் பினோய் விசுவம் வழக்கு தொடர்ந்துள்ளார். மனு மீதான விசாரணை விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே கேரளாவுக்கு வெளிநாடுகளின் நிதியுதவி கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தெரியவரும்.

You may have missed