சென்னை:
ரடங்கு விதிகளை மீறியதால் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால், எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடத்துவதற்கு அதிமுக தரப்பு காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் அனுமதி தரவில்லை. வரும் 12ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்ட அதிமுக இன்று கடும் நெருக்கடிக்கு மத்தியில் கூட்டத்தை நடத்தியது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு வெளியே அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒருவழியாக பிரச்னை முடிந்தது என நினைத்தால் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் உள்ளிட்ட 250 பேர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தடையை மீறி அதிமுக தலைமையகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.