நாகை: நாகப்பட்டினம் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியின விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆளுநர் ஷாநவாஸ். இவரது குறித்து, பாஜக நிர்வாகி சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் “பாஜகவின் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரண செய்தி விரைவில் வரும்”  என தெரிவித்திருந்தார். இது சர்ச்சையானது. இது தொடர்பாக காவல்துறையினர் பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை தெற்கு பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் முகநூல் பக்கத்தில், “மே 22 ஆயிரத்து 21 வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க படவேண்டிய பொன் நாள். தமிழிசை அவர்களின் மந்திரமாய் முழங்கிய தாமரை மலர்ந்தே தீரும் என்பதற்கிணங்க இன்று தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது. இக்காலத்தில் பணியாற்றிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும், கட்சியின் உண்மை தொண்டர்களுக்கும், கூட்டணி நிர்வாகிகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றியை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வெற்றிப் பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரண செய்தி விரைவில் வரும் என நினைக்கிறேன் “என்று பதிவிட்டிருந்தார்.

இது சர்ச்சையானது. இதையடுத்து, நான் யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை. தமிழன் பிரசன்னா அவர்களின் பதிவை ஒட்டி அப்படி எழுதி இருந்தேன் .இதற்கு முன் நான் எப்போதும் யாரும் புண்படும்படி எழுதி ஏதுமில்லை. வருந்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காவல்துறையிர் புகார் கொடுக்கப்பட்டது.  அதன்பேரில்  பாஜக நிர்வாகி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.