பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றக்கோரி வழக்கு! உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி,

ழைய 500 மற்றும் 1000 ரூபாய்  நோட்டுகளை மாற்ற மேலும்  அவகாசம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், பதில் மனுதாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும்  ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. அதை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்ற பொதுமக்கள் கடும் சிரமத்தை அனுபவித்தனர்.

பழைய பணத்தை மாற்ற மேலும் அவகாசம் அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மத்திய அரசு அவகாசம் அளிக்க மறுத்தது.

இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மேலும் அவகாசம் வழங்கக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.