சென்னை:
மிழகத்தில் காய்கறி, பழங்களை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக் கோரிய வழக்கு 12ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கி உள்ளது. அதற்கு பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும்  என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கையாக  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்ற விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால்,  பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, விளை பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான கடந்த விசாரணையின்போது, மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும்  நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  வரும் 12ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.