சென்னை:
மிழகத்தில்  மணல் விற்பனை அரசின் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால்,  விற்பயை  ஒழுங்குப்படுத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டது.
தமிழ்நாடு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,  மணல் விற்பனையை ஒழுங்குப்படுத்த கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், மணல் விற்பனை ஒழுங்குப்படுத்தப் பட வேண்டும் என்றும் உலர், சவுடு, வண்டல், சரளை மண் எடுக்க அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட கோரியும், தமிழ்நாடு மணல் கழகம் என்று தனி துறையை உருவாக்கக்கோரியும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுமீதான கடந்த விசாரணையின்போது,  தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  தமிழ அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
விசாரணையைத் தொடர்ந்து,  மணல் விற்பனையையும் ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு விரிவான பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சட்டவிரோத மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆவணங்களை யும் தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளனர். வழக்கு ஆகஸ்டு 21ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.